தாம்பரம் அருகே 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டிய கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை


தாம்பரம் அருகே 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டிய கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 8 Dec 2025 4:27 PM IST (Updated: 8 Dec 2025 6:23 PM IST)
t-max-icont-min-icon

முன்விரோதத்தின் காரணமாக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று இரவு 8.30 மணியளவில் செய்யூரைச் சேர்ந்த தினேஷ், செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் ஆகிய 2 இளைஞர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கும்பலாக வந்து தினேஷ் மற்றும் அப்துல் ரஹீமை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தினேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஊரை விட்டு வந்து சென்னையில் கடந்த 3 நாட்களாக டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல், முன்விரோதத்தின் காரணமாக அவரை அரிவாளால் வெட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதேபோல், மற்றொரு இளைஞர் அப்துல் ரஹீம் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் மீதும் முன்விரோதத்தின் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story