பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமி; குற்றவாளியின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு


பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமி; குற்றவாளியின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய நபரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அந்த சிறுமியை கர்ப்பமாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ரவிச்சந்திரனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் சிறுமிகளுக்கு எதிராக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் ஏற்படக் கூடிய பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மாநில அரசு, கடுமையான தண்டனை வழங்கும் வகையில் தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், பாலியல் தொந்தரவு தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story