சிறுமியிடம் பாலியல் சீண்டல்: ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை

போலீசார் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் மாணவி ஆட்டோவில் சென்றபோது ஆட்டோவை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் அந்த மாணவியை டிரைவர் இருக்கையில் அமர வைத்து ஆட்டோ ஓட்டச் சொல்லி கற்றுக் கொடுத்துள்ளார்.
அப்போது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் பள்ளிக்கரணை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






