எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை - டிடிவி தினகரன்

அண்ணாமலையும் நானும் டெல்லி செல்வதாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 10 ஆண்டுகளில் நான் யாருடனும் தொடர்பில் இல்லை. நாளுக்கு ஒரு பேச்சு பேசுபவன் இல்லை. பாஜகவின் பாதுகாப்பில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார். பழனிசாமி முகம் வாடியுள்ளது. அவரை விட்டு விடுங்கள். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அவரை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போக மாட்டோம்.
பழனிசாமிக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை. எடப்பாடி பழனிசாமியை நாங்கள்தான் முதல் அமைச்சர் ஆக்கினோம். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் யாருடையது என்று எனக்கு தெரியும். ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் முதல்வர் ஆகிவிடுவேன் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார்.
அண்ணாமலையும் நானும் டெல்லி செல்வதாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மகிழ்ச்சியான செய்தி வரும். அண்ணாமலையும் நானும் தினமும் உரையாடுவோம். பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் கூறியதில் வருத்தம் இல்லை. அண்ணாமலை குணத்துக்கும் என் குணத்துக்கும் நிறைய ஒத்துப்போகின்றன” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






