தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.

மேலும், 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து தோழர் முத்தரசனிடமும் - அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story