சட்டவிரோத குவாரி: குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு


சட்டவிரோத குவாரி: குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
x

கோப்புப்படம்

சட்ட விரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சட்டவிரோதமாக குவாரிகள் தொடர்பாக புதுக்கோட்டை, மாத்தூரை சேர்ந்த காசிராஜன் என்பவர், ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வில் பொதுநலவழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்டு அபராத தொகை கட்டாதவர்கள் மீது வருவாய் மீட்புச் சட்டம் படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story