அமெரிக்காவில் 'இந்திய தொழில் அதிபர் மீது ரூ.44 ஆயிரம் கோடி மோசடி புகார்


அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் மீது ரூ.44 ஆயிரம் கோடி மோசடி புகார்
x
தினத்தந்தி 1 Nov 2025 11:07 PM IST (Updated: 2 Nov 2025 2:41 AM IST)
t-max-icont-min-icon

பங்கிம் பிரம்மப்பட் மீது பிரபல அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் மோசடி புகார் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழில் அதிபர் பங்கிம் பிரம்மபட். இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.இந்த நிலையில், பங்கிம் பிரம்மபட் மீது பிரபல அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம் கோடி) கடன் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளது.

பிளாக்ராக் நிறுவனத்தின் தனியார் கடன் பிரிவான எச்.பி.எஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் பிற அமெரிக்க கடன் வழங்கும் நிறுவனங்களில், பங்கிம் பிரம்மபட் போலி வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் அந்த பணத்தை இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கு மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story