இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 20482) இன்று முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

இதேபோல், ஜோத்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் 10-ந் தேதி முதல் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12695) 6-ந் தேதி முதலும், இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் வரும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

மேலும், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து மங்களூரு சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12601) இன்று முதல் ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து மும்பை சி.எஸ்.டி. செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதலும், (22158) மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து சென்னை கடற்கரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story