வேளச்சேரி ரெயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


வேளச்சேரி ரெயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை

வேளச்சேரி புறநகர் ரெயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்க உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய முயற்சியாக வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இறகுப் பந்து, ஜிம்னாஸ்டிக் என உள்ளரங்கு விளையாட்டு திடல் அமைக்கப்பட உள்ளது.

வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் செயல்முறை IREPS போர்ட்டலில் (http://ireps.gov.in) மின்னணு ஏலம் மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் வருகிற நவம்பரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

1 More update

Next Story