சர்வதேச விண்வெளி வார விழா: மாதிரி ராக்கெட் ஏவி அசத்திய அரசு பள்ளி மாணவிகள்

உலக நாடு முழுவதும் விண்வெளி அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது.
சர்வதேச விண்வெளி வார விழா: மாதிரி ராக்கெட் ஏவி அசத்திய அரசு பள்ளி மாணவிகள்
Published on

உலக நாடு முழுவதும் விண்வெளி அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பாட்டிலில் கால்பங்கு நீர் நிரப்பி காற்றடைத்து மாதிரி ராக்கெட்டை வானில் ஏவி அசத்தினர். மாணவிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய மாதிரிகளை அட்டையில் உருவாக்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர்கள் கிரேனா, கமலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு மாதிரி ராக்கெட்டை வானில் ஏவுவது குறித்து பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வானில் ஏவப்பட்ட மாதிரி ராக்கெட்டை பார்த்து வியந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com