சாத்தான்குளம் யூனியனில் இரவு காவலர் பணிக்கு நேர்காணல்; ஒரு இடத்திற்கு 50 பேர் போட்டி

தேர்வு எழுதியவர்களில் 50 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் யூனியனில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் பணியிடத்திற்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 78 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் தேர்வு எழுதியவர்களில் 50 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
நேற்று ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாந்தி தலைமையில், ஆணையாளர் சுடலை முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அப்ேபாது பங்கேற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்கப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் கலெக்டர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தகுதியானவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






