‘தீபாவளிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லாதது வரலாற்றுப் பிழை’ - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக அரசு போலி மதசார்பின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“எந்த மத விழாக்களாக இருந்தாலும் நான் அனைவருக்கும் சமமாக, ஒற்றுமையாகத்தான் வாழ்த்து சொல்வோம். ஆனால், நாம் இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய தீபாவளி பண்டிகைக்கு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லாதது வரலாற்றுப் பிழை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாழ்த்துகள் என்று சொல்கிறார். மற்ற மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு நீங்கள் அப்படி சொல்வதில்லை. எனவே, போலி மதசார்பின்மையை தமிழக அரசு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தீபாவளியை கொண்டாடும் மக்கள் அனைவரும் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






