பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பது பீகார் இளைஞர்களின் பொறுப்பு - ராகுல்காந்தி


பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பது பீகார் இளைஞர்களின் பொறுப்பு - ராகுல்காந்தி
x

பீகார் தேர்தலில் பாஜக வாக்குகளைத் திருட முயற்சிக்கும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது;

“பாஜகவும், தேர்தல் ஆணையமும் அரியானா தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டன என்பதை நாங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளோம். பீகாரிலும் அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள். இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீகார் இளைஞர்களின் பொறுப்பு. வாக்குச் சாவடிகளில் நீங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பீகாரில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியோ கோடீஸ்வரர்களின் ஆட்சியையே விரும்புகிறார். பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரோ, மாநில இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றுகிறார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story