திருவண்ணாமலையில் பெண் போலீசிடம் நகை பறிப்பு - 2 வாலிபர்கள் கைது


திருவண்ணாமலையில் பெண் போலீசிடம் நகை பறிப்பு - 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 24 Aug 2025 10:48 AM IST (Updated: 24 Aug 2025 12:39 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்து 4½ பவுன் நகை, பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை,

கலசபாக்கத்தை அடுத்த பாடகம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 28), திருவண்ணாமலை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், திருவண்ணாமலை வேங்கிக்கால் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், கடந்த 19-ந்தேதி இரவில் பாடகம் கிராமத்திற்கு சென்றுவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார்.

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் திருவண்ணாமலை புரட்சி நகர் அருகில் பைக்கில் வந்த 2 பேர் திடீரென கலையரசி கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், நகை பறிப்பில் ஈடுபட்டது கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி கடம்பை கிராமத்தை சேர்ந்த ஷேக்ஹணீப் (22), ஷரீப் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து 4½ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story