கந்தூரி விழா: 2 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோப்புப்படம்
நாகூர் கந்தூரி விழாவையொட்டி 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாகூர் கந்தூரி விழாவையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை எழும்பூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 28 (இன்று) முதல் 30-ந்தேதி வரை 2 தூங்கும் வசதி முன்பதிவு பெட்டிகளும், பெங்களூரு - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 28 (இன்று) முதல் 30-ந்தேதி வரை 2 முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






