திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - காவல் அதிகாரிகள் ஆய்வு


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - காவல் அதிகாரிகள் ஆய்வு
x

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகள் இன்று கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோவில் கருவறையின் முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகள் இன்று கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி வேலூர் சரக டி.ஐ.ஜி. தர்மராஜன், வேலூர் மற்றும் திருவண்ணாமலை எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று கோவில் வளாகம், தீபம் ஏற்றும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

1 More update

Next Story