கரூர் துயரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு


கரூர் துயரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு
x

ரூரில் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளார்.

சென்னை,

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான், அண்ணாமலை, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கரூரில் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story