கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை


கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை
x

கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியின் இளைய மகன் ரோகித் (13 வயது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சிறுவன் ரோகித்தை மர்மநபர்கள் காரில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தனர். ஆனால் இன்று காலை வரை சிறுவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்குள்ள வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவில் சாலை ஓரத்தில் சிறுவனின் சடலம் கிடைத்திருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story