கிருஷ்ண ஜெயந்தி திருநாள் - டி.டி.வி. தினகரன் வாழ்த்து

கோப்புப்படம்
கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான், எனது என்ற பற்றை நீக்கி இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவதோடு, கடமைகளைச் சரிவரச் செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலைநிறுத்தி மனிதகுலம் மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
உலகம் போற்றும் ஒப்பற்ற நூலான பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவான் பிறந்த இந்நாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






