14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு அதிகரிப்பு


14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு அதிகரிப்பு
x

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நாளை நடைபெற உள்ளது நாளை அதிகாலை 5:45 மணி முதல் 6.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சூரனை வதம் செய்து முருகப்பெருமான் வந்த தலம் திருப்பரங்குன்றம் என்பதால், வெற்றி வாகை சூடிய முருகப்பெருமானுடைய வேலுக்கு பூஜைகளும் அபிஷேகங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம். பல்வேறு சிறப்புகளை பெற்ற திருத்தலம் என்பதாலும் முருகனின் முதல் படை வீடு என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் குடமுழுக்கை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹார்விபட்டி சந்திப்பு,நிலையூர், மலைக்கு பின்புறம் உள்ள கிரிவலப் பாதைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதேபோல் காவல்துறையிடம் மஞ்சள் நிறம், பச்சை நிறம் என அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள் க்யூ ஆர் கோடு மூலம் நிறுத்தும் இடத்தை கண்டறிய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவில் சுற்றியுள்ள சாலைகள் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருப்பதால் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வரிசையாக செல்வதற்கு இருபுறமும் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குடமுலுக்கை பக்தர்கள் ஆங்காங்கே நின்று காண்பதற்காக 27 எல்இடி திரைகள் திருக்கோவிலை சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள தேனீநீர் கடை உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கும்பாபிஷேகத்தன்று கோவில் சன்னதி தெரு, கீழ ரத வீதி, மேல ரத வீதிகளில் உள்ள கடைகளை அடைக்கச் சொல்லி உத்தரவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story