ஓடும் ரெயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலர் சஸ்பெண்ட்

பாலியல் தொல்லை கொடுத்த காவலர் குறித்த வீடியோவை மாணவி ரெயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஷேக் முகமது, அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவிக்கு காவலர் ஷேக் முகமது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அந்த மாணவி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து ரெயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த ரெயில் காட்பாடி வந்தபோது, ரெயில்வே போலீசார் காவலர் ஷேக் முகமதை கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் மாணவி அளித்த புகாரின்பேரில் காவலர் ஷேக் முகமதை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story






