ஆகஸ்டு 7ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் தென்காசி மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story






