ஏரியில் கூட தாமரை வளரவே கூடாது - அமைச்சர் சேகர்பாபு


ஏரியில் கூட தாமரை வளரவே கூடாது - அமைச்சர் சேகர்பாபு
x

கோப்புப்படம் 

போரூர் பசுமை பூங்காவில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு பசுமைப் பூங்காவின் பணிகளை இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரவே கூடாது என்று கிண்டலாக பேசினார். அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை கேட்டு அதிகாரிகள் சிரித்தனர். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பா.ஜ.க.வினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story