மதுரை: சுடுதண்ணீரில் தவறி விழுந்து 7 மாத குழந்தை உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் கொதிக்க வைத்த தண்ணீரில் குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
மதுரை,
மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி விஜயலட்சுமி தனது குழந்தையை கட்டிலில் தூங்கவைத்துவிட்டு, சமையலறைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் குளிப்பதற்காக தண்ணீரை கட்டிலுக்கு அருகிலேயே வாட்டர் ஹீட்டர் மூலம் கொதிக்க வைத்துள்ளார். அப்போது குழந்தை தவறி கொதிக்கும் சுடுதண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில், சுடுதண்ணீரில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






