சிறைத்துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறை - மதுரை ஐகோர்ட்டு கிளை பாராட்டு


சிறைத்துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறை - மதுரை ஐகோர்ட்டு கிளை பாராட்டு
x

கைதிகளுக்கு கொடுக்கப்படும் சிறு தண்டனைகளின் விவரத்தை பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் விசாரணை கைதி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கைதிகளுக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறைக்குள் தவறு செய்யும் கைதிகளுக்கு சிறு தண்டனைகள் கொடுக்க நேர்ந்தால், அவர்களிடம் எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற எழுத்துப்பூர்வ ஆவணத்தை கொடுக்க வேண்டும் எனவும், தண்டனை விவரத்தை கைதியின் பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து சிறைகளிலும் பின்பற்ற உத்தரவிட்டனர்.

1 More update

Next Story