மாரத்தான் போட்டி: சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

சென்னையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
மாரத்தான் போட்டி: சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
Published on

இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை 3 கட்டமாக நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக அன்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி ரெயில் சேவை காலை 3 மணி முதல் 5 மணி வரை இயக்கப்படாது என்றும், இந்த நேரங்களில் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்டிரல்(கிண்டி வழியாக செல்லும் ரெயில்களில்), ஆலந்தூர் அறிஞர் அண்ணா மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com