திருச்செந்தூரில் ரூ.440 கோடிக்கு பெருந்திட்ட பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்


திருச்செந்தூரில் ரூ.440 கோடிக்கு பெருந்திட்ட பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 18 April 2025 6:45 PM IST (Updated: 18 April 2025 7:26 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதிக்கு நிகராக திருசெந்தூரை வடிவமைத்த சிற்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தூத்துக்குடி,

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை மாற்ற அனுமதி பெற்று 440 கோடி ரூபாய்க்கு பெருந்திட்ட பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சேவூர் ராமசந்திரனின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 கோடியுடன் கூடுதலாக 16 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்து பக்தர்கள் தங்கும் விடுதி ஓராண்டுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் கூறினார். திருப்பதிக்கு நிகராக திருசெந்தூரை வடிவமைத்த சிற்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

1 More update

Next Story