மயிலாடுதுறை: பேராசிரியர் தம்பதி வீட்டில் 22 பவுன் நகைகள் கொள்ளை


மயிலாடுதுறை: பேராசிரியர் தம்பதி வீட்டில் 22 பவுன் நகைகள் கொள்ளை
x

வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று உள்ளனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு சாரதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 49). இவருடைய மனைவி விஜயா. கணவன்-மனைவி இருவரும் கல்லூரி பேராசிரியர்கள் ஆவர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சிக்கு சென்றனர். இந்த நிலையில் மணிகண்டனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து திருச்சியில் இருந்து மணிகண்டன் மயிலாடுதுறையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை கொள்ளையர்கள் தூக்கி சென்றதும் அந்த லாக்கரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது. மேலும், வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரையும் விட்டு வைக்காத மர்ம ஆசாமிகள் அதையும் திருடிச்சென்று உள்ளனர். இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story