உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடியில் உப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, அவர்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை போனஸாக வழங்கி வருகிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி லைசன்ஸ்தாரர்கள் உப்பளங்களில் விற்பனை முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில், "தி.மு.க.வில் கலைஞாின் முரட்டு பக்தனாக இருந்த எனது தந்தை 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தொழிலாளர்கள் நலன் மட்டுமின்றி தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பணியாற்றியது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வும் பெற்றுக் கொடுத்தார்.
அவரது மறைவிற்கு பின்பு பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின்படி அப்பணியை தொடர்ந்து பொறுப்பேற்று செய்து வருகிறேன். தூத்துக்குடி மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமான உப்பளம் மற்றும் உப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கு போனஸாக வழங்கி வருகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் மூர்த்தி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், உப்பள சங்கத்தை சேர்ந்த கனகராஜ், விஜி உட்பட பலா் கலந்து கொண்டனர்.






