மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள்: பனகல் பார்க் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள்: பனகல் பார்க் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
x

கோப்புப்படம் 

சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் இன்று முதல் வருகிற டிசம்பர் 1-ந்தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு/வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் 01.12.2024 வரை 7 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக, அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவர். வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story