'மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' - உதயநிதி ஸ்டாலின்


மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Nov 2024 9:10 PM IST (Updated: 13 Nov 2024 12:24 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்ளில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தரமணியில் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஸ்டார்ட் அப் சென்னை(STARTUP CHENNAI) - செய்க புதுமை' திட்டம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மெட்ரோ நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. யாரை அரசியல் எதிரியாக பார்க்கிறது? என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.

1 More update

Next Story