750 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய அமைச்சர்


750 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய அமைச்சர்
x

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சென்னை,

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

750க்கும் மேற்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு, இலவச பேட், ஸ்டம்ப் மற்றும் பந்துகளை அமைச்சர் வழங்கினார். அமைச்சர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கிரிக்கெட் அணியினருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.



1 More update

Next Story