தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி தகவல்


தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2025 3:37 PM IST (Updated: 23 Feb 2025 3:37 PM IST)
t-max-icont-min-icon

தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மேலப்பாளையம் அருகே இரும்பு வலைகளால் செய்யப்பட்ட புதிய ஆட்டுப்பட்டியை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் ஆணைக்கான கோப்புகள் முதல்-அமைச்சரிடம் உள்ளதாகவும், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

1 More update

Next Story