ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு


ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
x

இந்த கட்டிடம் 657 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்படவுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிக்காட்டுதலின்படி, இன்று (07.01.2026) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 பல்நோக்குக் கட்டிடங்கள், அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பிராட்வே சாலை, N-3 முத்தையால்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள ஜீல்ஸ் தெருவில் மாநகராட்சியின் சார்பில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மையக் கட்டிடப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.

இந்த கட்டிடம் 657 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளத்தில் அலுவலகம், மருந்தகம், வாகன நிறுத்தம், மின்தூக்கி வசதி, முதல் தளத்தில் சென்னை குடிநீர் வாரிய அலுவலக அறை, கழிப்பிடம், இரண்டாம் தளத்தில் மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அலுவலக அறை, கழிப்பிடம் ஆகியவை கட்டப்படவுள்ளது.

பின்னர், ஆசிர்வாதபுரம், அம்மன் கோவில் தெரு அருகில் மாநகராட்சியின் சார்பில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மையக் கட்டிடப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர். இந்த கட்டிடம் 496 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளத்தில் வாகன நிறுத்த வசதி, முதல் தளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலக அறை, கழிப்பிடம், இரண்டாம் தளத்தில் மாநகராட்சியின் மின்துறை உதவிப் பொறியாளர் அலுவலக அறை, கழிப்பிடம், மூன்றாம் தளத்தில் சுகாதார ஆய்வாளர் அலுவலக அறை, வரி வசூலிப்பாளர் அலுவலக அறை, கழிப்பிடம் ஆகியவை கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, வட்டார துணை ஆணையாளர் கட்டார ரவி தேஜா, (வடக்கு), மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் வெ.பரிமளம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story