தூத்துக்குடியில் புதிய மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்


தூத்துக்குடியில் புதிய மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Dec 2024 5:59 PM IST (Updated: 29 Dec 2024 6:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இன்று மாலை தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இப்பூங்காவானது 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. சுமார் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story