உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்


உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
x

தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித்தொகை 16,562 குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 கோடியே 28 லட்சத்து 10 ஆயிரம் வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித் தொகை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மழைக்கால நிவாரண நிதி ரூ.6 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் மழைக்காலம் தொடங்கும் முன்பே அரசால் விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக கடந்த அக்டோபர் 17ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story