மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
x

கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

தென்காசி

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (23.9.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story