மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் இன்று மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் இன்று மின்தடை
x

தூத்துக்குடியில் வாகைகுளம் துணைமின் நிலையம் மற்றும் திருச்செந்தூர் பகுதியில் இன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (புதன்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக மின்விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாகைகுளம் துணைமின் நிலையத்தில் இன்று (7.1.2026, புதன்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வாகைகுளம் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், போடம்மாள்புரம், சிறுபாடு,

திரவியபுரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், பேரூரணி வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருச்செந்தூர் பகுதியில் இன்று (7.1.2026, புதன்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் "மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காந்திபுரம், கிருஷ்ணாநகர், திருச்செந்தூர், காயாமொழி, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகர், அமலிநகர், தோப்பூர், பாளைரோடு, ஜெயந்திநகர், ராமசாமியபுரம், கானம், குரூம்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, நாலுமாவடி, வடலிவிளை, தென்திருப்பேரை,

மாவடிபண்ணை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், பறையூர், மணத்தி, கல்லக்குவாய்ச்சான், ராஜபதி, வரண்டியவேல், வீரமணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story