அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
பாரதம் சிறக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தாய் மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்டியடித்து சுதந்திரம் பெற்ற நன்னாளான இப்பொன்னாளில் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று என்று பாடிய நீர்க்கதரிசி மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தங்களின் சொந்த நலன்களை மறந்து நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த தியாகச் செம்மல்களை நினைவுகூரும் திருநாள் சுதந்திரத் திருநாள்.
இந்திய நாடு சுதந்திரம் அடைத்து 79 ஆண்டுகள் ஆகியும், "எல்லோரும் ஒன்று எனும் காலம் வந்துவிட்டதா" என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் விடையாக இருக்கிறது. உண்மையான சுதந்திரம் என்பது சாதி மத வேறுபாடுகளின்றி அனைத்துத் நரப்பு மக்களும் வளம் பெற்று, அச்சமின்றி வாழ்வதுதான். இந்த நிலையை நாம் இன்னமும் எய்தவில்லை என்பதுதான் யதார்த்தம்.
தங்கள் உயிரை துச்சமென மதித்து போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காக்கவும், "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதற்கேற்ப அனைத்துத் தாப்பு மக்களும் வளம் பெறவும், இந்த சுதந்திர தின நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
"ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில், இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே" என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து பாரினில் பாரதம் சிறக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






