நாகை மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


நாகை மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x

நாகை மெய்கண்ட மூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகை நீலா தெற்கு வீதியில் கிழக்கு நோக்கி மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோவில் என்னும் குமரன் கோவில் உள்ளது. அழகுமுத்துப் புலவருக்கு காட்சி கொடுத்து வேலாயுத சதகம் திருப்புகழ் பாடச்செய்ததும், மூலவர் சன்னதிக்கு எதிரே ஐராவதம் பிரதிஷ்டை செய்யப்பெற்றதும், நானூறு வருடங்கள் பழமையானதும், குபேரனுக்கு தனி சன்னதி அமையப் பெற்றதுமான இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் 31-ந்தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை ,வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 6-ம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி முடிந்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் புறப்பட்டு ராஜகோபுரம், மூலவர் உள்ளிட்ட விமானங்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் 10.05 மணிக்கு அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story