2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும்: எல்.முருகன்


2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும்: எல்.முருகன்
x

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி,

புதுச்சேரியில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி எல்.முருகன் கூறியதாவது,

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகளை முடித்து 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறதுபிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து நாட்டை சீரான வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story