இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் - மு.க.ஸ்டாலின்

இனி தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் என எடுத்துக்காட்டும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டேன்.
மத்திய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும்!
திராவிடத்துக்கே உரிய முற்போக்கு விமர்சனப் பார்வையை முன்னிறுத்திப் பேசியதோடு, வாசிப்பினைக் கொள்கைச் செயல்பாடாக முன்னெடுக்கும் நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளையும் பாராட்டிய #சர்வதேசபுக்கர்பரிசு (InternationalBookerPrize) வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக்குக்கு எனது நன்றிகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






