தூத்துக்குடியில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
x

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவியரத்தினநகர், கணேஷ்நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம்நகர், செல்சீலிகாலனி ஆகிய பகுதிகளில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவியரத்தினநகர், கணேஷ்நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம்நகர், செல்சீலிகாலனி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சரவணகுமார், வைதேகி, வட்டச் செயலாளர்கள் மூக்கையா, பொன்பெருமாள், வட்ட அவைத் தலைவர்கள் பெரியசாமி, சிவனனைந்தபெருமாள், செல்வம், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பேச்சிராமன், சோமு, ராஜேஷ், கணேசன், ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் நலம் ராஜேந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story