நீலகிரி: மண் சரிவில் சிக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் பலி - 2 பேர் மீது வழக்குப்பதிவு

கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனட்டி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் அந்த 3 தொழிலாளிகளும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தொழிலாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்களான அப்துல் ரகுமான் (வயது 25), நசீர் உசேன்(30), உஸ்மான் (40) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மண்சரிந்து தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அருவங்காடு போலீசார், ஒப்பந்ததாரர் மார்ட்டின் மற்றும் இடத்தின் உரிமையாளர் முத்து கிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story






