கண்ணீர் வேண்டாம் தம்பி... மருத்துவ உதவி கோரிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு முதல்-அமைச்சர் பதில்


கண்ணீர் வேண்டாம் தம்பி... மருத்துவ உதவி கோரிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு முதல்-அமைச்சர் பதில்
x

கோப்புப்படம் 

மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் கீர்த்திவர்மா. இவர் இன்று வெளியான 12-ம் பொதுத்தேர்வு முடிவில் 600-க்கு 471 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவனான கீர்த்திவர்மா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கண்ணீர் வேண்டாம் தம்பி என்று மாணவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கண்ணீர் வேண்டாம் தம்பி! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story