வடகிழக்கு பருவமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story






