பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாலசமுத்திரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது. இந்த அணியின் மொத்த உயரம் 65 அடி ஆகும். இந்நிலையில், பாசனத்திற்காக இந்த அணையில் இருந்து நாளை முதல் 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, பழைய 6 அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு, 24.12.2025 முதல் 03.03.2026 வரை 70 நாட்களுக்கு, 770.77 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு மற்றும் கீரனூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






