மத்திய மந்திரி நிதின் கட்காரியின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுப்பு


மத்திய மந்திரி நிதின் கட்காரியின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 14 Oct 2025 6:07 AM IST (Updated: 14 Oct 2025 1:37 PM IST)
t-max-icont-min-icon

மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்டர்கள் தவிர்த்த பிற ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீனம்பாக்கம்,

மத்திய மந்திரி நிதின்கட்காரி நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மறைமலைநகர் போர்டு தொழிற்சாலை வளாகத்துக்கு சென்று, அங்கிருந்து காரில் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்து மீண்டும் அதேபோல் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் பட்டமளிப்பு விழா முடிவடைவதற்கு தாமதம் ஆகிவிட்டதால் பாதுகாப்பு கருதி மத்திய மந்திரியின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கார் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு தனி விமானத்தில் நாக்பூர் புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story