கரூர் கூட்ட நெரிசலுக்கு போலீசாரின் மெத்தன போக்கே காரணம்: சசிகலா குற்றச்சாட்டு


கரூர் கூட்ட நெரிசலுக்கு  போலீசாரின் மெத்தன போக்கே காரணம்: சசிகலா குற்றச்சாட்டு
x

மு.க ஸ்டாலின் சும்மா வந்தோம் பார்த்தோம் என்று இருக்கக் கூடாது என்று சசிகலா விமர்சித்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவர்களை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர். நாட்டையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், சசிகலா கூறியதாவது; கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு போலீசாரின் மெத்தன போக்குதான் முதல் காரணம். காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சும்மா வந்தோம் பார்த்தோம் என்று இருக்கக் கூடாது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

1 More update

Next Story