காவல் நிலையத்தை வீடியோ எடுத்து ரீல்ஸ் - 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


காவல் நிலையத்தை வீடியோ எடுத்து ரீல்ஸ் - 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x

பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை வீடியோ எடுத்து, இளைஞர்கள் சிலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் பைக்கில் வேகமாக சென்று, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 6 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் இனிமேல் பைக்கில் அதிவேகமாக செல்லவோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ நடந்து கொள்ள மாட்டோம் என மன்னிப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

1 More update

Next Story